/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்தியால்பேட்டையில் தீப்பந்த ஊர்வலம்
/
முத்தியால்பேட்டையில் தீப்பந்த ஊர்வலம்
ADDED : ஆக 19, 2025 07:48 AM

புதுச்சேரி : முத்தியால்பேட்டை காங்., சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மற்றும் பீகார் மாநில சிறப்பு வாக்காளர் திருத்தத்தை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி கண்டன ஊர்வலம் நேற்று நடந்தது.
ஊர்வலத்திற்கு காங்., மாநில செயலாளரும், முத்தியால்பேட்டை தொகுதி காங்., பொறுப்பாளருமான ஈரம் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சவ்தாங்கர், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, காங்., சீனியர் மூத்த துணைத்தலைவர் தேவதாஸ், வட்டார காங்., தலைவர்கள் ஆனந்தபாபு, கிருஷ்ணராஜ் மற்றும் இளைஞர் காங்., நிர்வாகிகள், மாநில, மாவட்ட, தொகுதி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஊர்வலம் முத்தியால்பேட்டை மார்க்கெட் பகுதியில் துவங்கி தொகுதி முழுவதும் சென்று, லாஸ்பேட்டை சின்ன மணிக்கூண்டு பகுதியில் நிறைவடைந்தது.