/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுற்றுலா கண்காட்சி இன்றுடன் நிறைவு
/
சுற்றுலா கண்காட்சி இன்றுடன் நிறைவு
ADDED : பிப் 25, 2024 04:21 AM

புதுச்சேரி : புதுச்சேரியில், தி டூரிசம் ெஷல்டர் ஈவென்ட் மேனேஜ்மென்ட் என்ற தனியார் நிறுவனம் சார்பில் நடக்கும் மூன்று நாள் சுற்றுலா கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
புதுச்சேரி கடற்கரை சாலை, காந்தி சிலை அருகில் கவுபர்ட் அவென்யூயில், 4ம் ஆண்டு சுற்றுலா கண்காட்சி, 23ம் தேதி துவங்கியது. மதியம் 3:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கும் இக்கண்காட்சி, இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இந்த சுற்றுலா கண்காட்சி (டிராவல் மார்ட்), உள்ளூர் மற்றும் நகர பகுதியை சேர்ந்த சுற்றுலா பிரியர்கள் பார்வையிடுவதற்கு நடத்தப்பட்டு வருகிறது.
கண்காட்சி வழியாக, இந்த நிறுவனம் சார்பில், இந்தியா மற்றும் வெளிநாடுகளின் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல முன்பதிவுகளை வழங்கி வருகிறது.
சுற்றுலா கண்காட்சியில் பங்கேற்பாளர் களுக்கு, குஜராத், திரிபுரா, மேகாலயா, சிக்கிம், ஜார்க்கண்ட் போன்ற சுற்றுலாத்துறை தொடர்பான பயண முகவர்கள், டூர் ஆப்ரேட்டர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் ஆகியோர்களின் தொடர்பை ஏற்படுத்தி, சுற்றுலா பயணத்தின் வசதிகளை ஏற்படுத்தி தரப்படும்' என இந்நிறுவனத்தின், சி.இ.ஓ., சவுகதா தெரிவித்தார்.
மேலும், விபரங்களுக்கு, 9830276785 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.