தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சுற்றுலாப்பயணி தொலைத்த வைர மோதிரம் மீட்டு ஒப்படைப்பு

சுற்றுலாப்பயணி தொலைத்த வைர மோதிரம் மீட்டு ஒப்படைப்பு

சுற்றுலாப்பயணி தொலைத்த வைர மோதிரம் மீட்டு ஒப்படைப்பு


ADDED : ஜன 19, 2024 07:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2024 07:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவை சேர்ந்தவர் அனில் கண்ணா, 49; இவர் சில தினங்களுக்கு முன் தனது மகள் அஸ்தா கண்ணாவுடன், 19; புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். தனியார் விடுதியில் தங்கி, சுற்றுலா தலங்களை கண்டுகளித்தனர்.

நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு புதுச்சேரி கடற்கரைக்கு சென்ற இருவரும், தலைமை செயலகம் எதிரே கருங்கல் பாறையில் அமர்ந்து பேசினர். பின்னர் விடுதிக்கு சென்று பார்த்தபோது, அஸ்தா கண்ணா கை விரலில் அணிந்திருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான வைர மோதிரத்தை காணவில்லை.

உடனே, தாங்கள் நடந்து சென்ற பாதையில் தேடிப் பார்த்தும் மோதிரம் கிடைக்காததால், பெரியக்கடை போலீசில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார், தீயணைப்பு படையினருடன் இணைந்து கடற்கரைக்கு சென்று இரவு 10:00 மணி வரை தேடியும் மோதிரம் கிடைக்கவில்லை.

நேற்று காலை 10:00 மணிக்கு மீண்டும் மோதிரத்தை தேட துவங்கினர். ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு, தந்தை, மகள் இருவரும் அமர்ந்திருந்த, கருங்கல் பாறைகளுக்கு அடியில் விழுந்து கிடந்த வைர மோதிரத்தை கண்டு பிடித்து, அனில்கண்ணா முன்னிலையில், அஸ்தா கண்ணாவிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us