/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடல் அலையில் சிக்கிய சுற்றுலா பயணி மீட்பு
/
கடல் அலையில் சிக்கிய சுற்றுலா பயணி மீட்பு
ADDED : ஜன 27, 2025 04:33 AM

புதுச்சேரி : சென்னையைச் சேர்ந்த 6 வாலிபர்கள் நேற்று புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர்.மதியம் 3:30 மணிக்கு மெரினா கடற்கரை சென்ற வாலிபர்கள் அங்குள்ள முகத்துவாரம் அருகேகடலில் இறங்கி குளித்தனர். அப்போது, சென்னையச் சேர்ந்த வாலிபர் அபி, 21; கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார்.
அவருடன் குளித்து கொண்டிருந்த நண்பர்கள் சத்தம் எழுப்பிக் கொண்டே காப்பாற்ற முயற்சித்தனர். கடற்கரையில் இருந்த ஒதியஞ்சாலை போலீசார், லைப்கார்டுகளுக்கு தகவல் தெரிவித்தனர். லைப் கார்டுகள் 2 பேர், கடலில் குதித்து அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட அபியைமீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். முதல் உதவி சிகிச்சை அளித்த பின்பு அபி இயல்பு நிலைக்கு திரும்பினார். ஒதியஞ்சாலை போலீசார் மற்றும் லைப் கார்டுகள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.