/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாண வேடிக்கை பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
/
வாண வேடிக்கை பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
வாண வேடிக்கை பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
வாண வேடிக்கை பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
ADDED : அக் 13, 2024 07:33 AM

பட்டாசு வாணவேடிக்கை நிகழ்வை காண குவிந்த நுாற்றுக்கணக்கான மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
புதுச்சேரி கான்பெட் நிறுவனம் சார்பில் வரும் 18 முதல் 30ம் தேதி வரை, தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் பட்டாசு விற்பனை நடக்கவுள்ளதாகவும், பட்டாசு விற்பனையில் பங்கேற்கும் பட்டாசு நிறுவனங்கள் சார்பில், நேற்று 12ம் தேதி மாலை 7:30 மணிக்கு, கடற்கரை சாலை, தலைமை செயலகம் அருகே பட்டாசு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்படும் என, அறிவிப்பு பேனர்கள் புதுச்சேரி முழுதும் வைக்கப்பட்டிருந்தது. வாண வேடிக்கையை காண ஏராளமான சுற்றுலா பயணிகள், உள்ளூர் பொதுமக்கள் கடற்கரையில் குவிந்தனர்.
இரவு 9:00 மணியை தாண்டியும் பட்டாசு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடத்தவில்லை. அங்கிருந்த போலீசார் மற்றும் கான்பெட் நிறுவன அதிகாரிகளிடம் பொதுமக்கள் விசாரித்தபோது, பட்டாசு வாண வேடிக்கை நிகழ்வு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி தரவில்லை. 18ம் தேதி வாண வேடிக்கை நிகழ்வு நடத்த அறிவுறுத்தி உள்ளனர்.
வாண வேடிக்கை நிகழ்ச்சிக்கான போஸ்டர்களில் தேதி மாற்றப்பட்டது தொடர்பாக புது அறிவிப்பும் ஒட்டியுள்ளோம்' என்றனர். தேதி மாற்றப்பட்டது தெரியாமல் ஏராளமான பொதுமக்கள் கடற்கரைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.