/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுற்றுலா பயணிகள் வாக்குவாதம் படகு குழாமில் பரபரப்பு
/
சுற்றுலா பயணிகள் வாக்குவாதம் படகு குழாமில் பரபரப்பு
சுற்றுலா பயணிகள் வாக்குவாதம் படகு குழாமில் பரபரப்பு
சுற்றுலா பயணிகள் வாக்குவாதம் படகு குழாமில் பரபரப்பு
ADDED : டிச 30, 2024 05:20 AM
அரியாங்குப்பம் : நோணாங்குப்பம் படகு குழாமில் போதிய படகுகள் இல்லாததால், வெகு நேரம் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
நோணாங்குப்பம் படகு குழாமில் வாரந்தோறும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிங்களில் இருந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.
அவர்கள் படகு சவாரி செய்து, பேரடைஸ் பீச்சிற்கு சென்று வர விரும்புவர். படகு குழாமிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் நுழைவு கட்டணமாக 10 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்பதால், வழக்கத்தைவிட மக்கள் அதிகளவில் குவிந்திருந்தனர்.
குழாமில் போதிய படகுகள் இல்லாததால், குடும்பத்துடன் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் வெகு நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அவதியடைந்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த சுற்றுலாப் பயணிகள், அங்கிருந்த படகு குழாம் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
பொதுவாக பண்டிகை காலம் மற்றும் வார விடுமுறை நாட்களில் படகு குழாமிற்கு பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும். எனவே, சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு ஏற்ப நோணாங்குப்பம் படகு குழாமில் கூடுதல் படகு வசதியை ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை ெடுக்க வேண்டும்.