/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆரோவில்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
ஆரோவில்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : ஆக 17, 2025 03:41 AM

வானுார்: தொடர் விடுமுறையையொட்டி, ஆரோவில்லில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 3000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஆரோவில்லில் உள்ள மாத்திர் மந்திர் தியான மையத்தை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், புதுச்சேரிக்கு வந்த சுற்றுலாபயணிகள் ஆரோவில் பகுதிக்கு படையெடுத்தனர்.
மாத்திர் மந்திரியை, 'வியூ பாயிண்ட்' பகுதியில் இருந்து பார்வையிட்டதுடன், செல்பி எடுத்து மகிழ்ந்தனர். நேற்று முன்தினம் 3000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர்.
நேற்று காலை முதல் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிக ள் வந்தனர். இதனால், இடையஞ்சாவடி - கோட்டக்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று (17ம் தேதி) ஏராளமான சுற்றுலா பயணிகள் வர வாய்ப்பு இருப்பதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.