ADDED : ஆக 18, 2025 04:07 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகையால், கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது.
புதுச்சேரிக்கு பண்டிகை காலம் மற்றும் வார இறுதி நாட்களில் வெளி நாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
சுதந்திர தினத்தையொட்டி, மூன்று நாள் விடுமுறையில், புதுச்சேரிக்கு தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநில சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர்.
சுற்றுலா பயணிகள் கடற்கரை, பூங்கா, அரவிந்தர் ஆசிரமம், நோணாங்குப்பம் படகு குழாம், மனக்குள விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றிபார்த்தனர். வார விடுமுறையின் இறுதி நாளான நேற்று புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
