/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம்
/
தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜன 27, 2026 04:34 AM

புதுச்சேரி: பொது வேலை நிறுத்தம் தொடர்பாக தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மத்திய அரசின் தொழிலாளர், விவசாயிகள் விரோத போக்கினை கண்டித்து அடுத்தமாதம் 12ம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்திட மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இப்போராட்டத்தை புதுச்சேரியில் நடத்துவது சம்மந்தமாக ஆலோசனை கூட்டம், முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யூ.சி., அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, ஐ.என்.டி.யூ.சி., மாநில பொதுச் செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார்.
ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொதுச் செயலாளர்அந்தோணி, மாநிலத் தலைவர் தினேஷ் பொன்னையா, சி.ஐ.டி.யூ., மாநில பொதுச் செயலாளர் சீனுவாசன், மாநில செயலாளர் மணிபாலன் உள்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

