/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்பாட்டம்
/
தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்பாட்டம்
ADDED : செப் 25, 2024 03:17 AM

புதுச்சேரி : புதுச்சேரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சுதேசி மில் அருகில் நடந்தது.
ஆர்பாட்டத்திற்கு, ஏ.ஐ. டி.யூ.சி., மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம், சி.ஐ.டி.யூ., மாநில செயலாளர் சீனிவாசன், ஐ.என்.டி.யூ.சி., மாநில பொதுச் செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஏ.ஐ.சி.சி.டி.யூ., மாநில செயலாளர் புருஷோத்தமன், எல்.எல்.எப்., மாநில செயலாளர் செந்தில், எம்.எல்.எப்., செயலாளர் வேதா வேணுகோபால், ஏ.ஐ.யூ.டி.யூ.சி., மாநில செயலாளர் சிவக்குமார், என்.டி.எல்.எப்., மாநில தலைவர் மகேந்திரன் முன்னில வகித்தனர்.
ஆர்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்கம் நிர்வாகிகள் அபிஷேகம், தினேஷ் பொன்னையா, சந்திரசேகரன், தயாளன், முருகன் மற்றும் பிரபுராஜ், கொளஞ்சியப்பன், மதிவா ணன், வடிவேல், நரசிங்கம், தமிழ்ச்செல்வம், அருள், சங் கரன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கண்டன ஆர்பாட்டத்தில், தொழிற்சங்கங்கள் போராடி பெற்ற 44 தொழிலாளர் நல சட்டங்களை, பா.ஜ., அரசு நான்கு தொகுப்புகளாக திருத்தம் செய்து அறிவித்துள்ளது.இச்சட்டத்தை அமலுக்கு கொண்டு வர துடிக்கும் பா.ஜ., அரசை கண்டித்து கோஷம் எழுப்பபட்டது.