sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை

நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை

நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை


ADDED : நவ 21, 2024 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2024 05:32 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜிப்மர் எதிரில் உழவர்கரை நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் தரை தளத்தில் 25 கடைகள், முதல் தளத்தில் 4 கடைகள் உள்ளன.

இக்கடைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக சிவசங்கரன் எம்.எல்.ஏ.,க்கு ரவுடி ராமு மிரட்டல் விடுத்தார். போலீசார் ரவுடி ராமுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜிப்மர் வணிக வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உழவர்கரை நகராட்சி கடந்த 16ம் தேதி அகற்றினர்.

அப்போது 4 கடைகளின் சுவர்களை உடைத்து ஒரே கடையாக நடத்தி வருவதும், சிலர் கடைகளின் சுவர்களை இடித்து மாற்றம் செய்திருப்பது தெரியவந்தது.

இதனால் விதிமுறைகளை மீறி சுவர்களை உடைத்த 10 கடைகளுக்கு, கடையின் லைசன்சை ஏன் ரத்து செய்ய கூடாது என, உழவர்கரை நகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. உழவர்கரை நகராட்சியில் நேற்று மாலை ஆஜரான வியாபாரிகள் நோட்டீசுக்கு விளக்கம் அளித்தனர்.

பின்பு, மாலை 6:00 மணிக்கு உழவர்கரை நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர். இடிக்கப்பட்ட சுவர்கள் மீண்டும் கட்டப்பட்ட பின்பும் லைசன்ஸ் ரத்து செய்வோம் என, நகராட்சி மிரட்டுவதாக புகார் தெரிவித்தனர். பின், அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us