தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காஸ் சிலிண்டர்கள் தட்டுபாட்டை போக்க வணிகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

 காஸ் சிலிண்டர்கள் தட்டுபாட்டை போக்க வணிகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

 காஸ் சிலிண்டர்கள் தட்டுபாட்டை போக்க வணிகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்


ADDED : மார் 12, 2026 03:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 03:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வணிகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

வணிகர்கள் கூட்டமைப்பு சேர்மன் சிவசங்கர் எம்.எல்.ஏ., தலைவர் பாபு ஆகியோர் தலைமை செயலர் சரத்சவுகானுக்கு அனுப்பியுள்ள மனு;

புதுச்சேரியில் தற்போது நிலவி வரும் சூழலால் ஓட்டல், உணவகங்களுக்கு வழங்கப்படும் காஸ் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, உணவக உரிமையாளர்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். ஊழியர்கள் மட்டுமின்றி உணவகங்களையே நம்பியிருக்கும் பொதுமக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கூடுதலாக, பால் பொருட்கள் மற்றும் காய்கறிகள் போன்ற முக்கியமான அத்தியாவசியப் பொருட்களும் இந்த காஸ்சிலிண்டர் தட்டுப்பாட்டினால் மறைமுகமாகப் பாதிக்கப்படுகின்றன. புதுச்சேரி வரும் சுற்றுலாப் பயணிகளின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிறு மற்றும் நடுத்தர உணவகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் சிறு, குறு, நடுத்தர உணவகங்கள் பாதிப்பிள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, புதுச்சேரியில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் காஸ் சிலிண்டர் விநியோகஸ்தர்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us