என்.ஆர் காங்., வேட்பாளருக்கு வியாபாரிகள் நலசங்கம் ஆதரவு
என்.ஆர் காங்., வேட்பாளருக்கு வியாபாரிகள் நலசங்கம் ஆதரவு
ADDED : ஏப் 03, 2026 05:30 AM

வில்லியனுார்: வில்லியனுார் தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமாருக்கு, வியாபாரிகள் நலசங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
வில்லியனுார் பைபாஸ் சுபமங்கலம் மகாலில் புதுச்சேரி வியாபாரிகள் நலசங்க கூட்டம் நடந்தது. மாநில தலைவர் பாபு தலைமை தாங்கினார். செயலாளர் சீனுவாசன், சுபமங்கலம் பாபு முன்னிலை வகித்தனர். வில்லியனுார் பகுதி நிர்வாகிகள் ராஜ்குமார், சிவா, மோகன், பென்டன்மாரி, முத்து, வீரா, பாலாஜி, அருண், ஜோசப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமார் ஆதரவு கோரி பேசினார். சங்க நிர்வாகிகள் பேசுகையில், கடை லைசன்ஸ், ரவுடி மாமுல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண கோரினர்.
அதனையேற்ற வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்றதும் முதல்வர், அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுப்பார் என, வேட்பாளர் உறுதி அளித்தார். வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், வேட்பாளர் ரவிக்குமாருக்கு மாலை அணிவித்து ஆதரவு தெரிவித்தனர். மாலையில் எஸ்.எஸ்.நகர் மற்றும் அம்பேத்கர் நகரில் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.
