தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலையில் போக்குவரத்து நெரிசல் மக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

 சாலையில் போக்குவரத்து நெரிசல் மக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

 சாலையில் போக்குவரத்து நெரிசல் மக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி


ADDED : ஏப் 12, 2026 10:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2026 10:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சட்டசபை தேர்லுக்கு பின்னர் புதுச்சேரி நகரப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதால், மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த 9ம் தேதி நடந்தது. தேர்தலையொட்டி, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தேர்தல் முடிந்த நிலையில், விடுமுறை நாள் என்பதால், வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியில் அதிகளவில் குவியத் துவங்கினர்.

இதனால், நேற்று மாலையில் புதுச்சேரி முக்கிய சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காமராஜ் சாலை, கொக்குபார்க் சந்திப்பு சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு போலீசார் இல்லாத நிலையில், நீண்ட வரிசையில் நின்ற வாகனங்களை பொதுமக்கள் சிலர் தாங்களை முன்வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்த போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.

இருந்தும் இரவு வரை இந்திர சதுக்கம், ராஜிவ் சதுக்கம் அண்ணா சாலை, நேரு வீதி, காமராஜ் வீதி, நெல்லித்தோப்பு சந்திப்பு, முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடி சந்திப்பு, ரெட்டியார்பாளையம் சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இந்திரா மற்றும் ராஜிவ் சதுக்கம் வழியாக ஜிப்மருக்கு சென்ற ஆம்புலன்ஸ்கள், வாகன நெரிசலில் செல்ல முடியாமல் சிக்கி தவித்தன. ஓட்டுப் பதிவை செய்ய சொந்த ஊருக்கு வந்தவர்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பஸ்சில் செல்ல புதிய பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு சென்றதால், அங்கும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us