/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போக்குவரத்து நெரிசல் இளைஞர்கள் சீரமைப்பு
/
போக்குவரத்து நெரிசல் இளைஞர்கள் சீரமைப்பு
ADDED : அக் 13, 2024 07:32 AM
புதுச்சேரி : பண்டிகை காலம் நெருங்குவதால், நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க தன்னார்வல இளைஞர்கள் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி நகரப் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்திரா காந்தி சிலை, ராஜிவ் காந்தி சிலை சதுக்கம், கொக்கு பார்க், காமராஜ் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலை சந்திப்புகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
வாகன ஓட்டிகள், சாலைகளை கடந்து செல்ல பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீசார், தன்னார்வலர் இளைஞர்களை அழைத்து, நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் பணியமர்த்தி, போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக, பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் இன்றி வாகன ஓட்டிகள் சாலைகளை கடந்து செல்ல முடிகிறது.