/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முறிந்து விழுந்த மரக்கிளையால் போக்குவரத்து பாதிப்பு
/
முறிந்து விழுந்த மரக்கிளையால் போக்குவரத்து பாதிப்பு
முறிந்து விழுந்த மரக்கிளையால் போக்குவரத்து பாதிப்பு
முறிந்து விழுந்த மரக்கிளையால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஆக 18, 2025 04:04 AM

புதுச்சேரி: வழுதாவூர் சாலையில் கன்டெய்னர் லாரி உரசி மரக்கிளை முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து பொருட்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி ஒன்று, நேற்று புதுச்சேரி வந்தது. குரும்பாபேட்டை தனியார் தொழிற்சாலையில் சரக்குகளை இறக்கிவிட்டு, 2.45 மணியளவில் வழுதாவூர் சாலை வழியாக முருகா தியேட்டர் நோக்கி வந்துகொண்டிருந்தது.
வி.வி.பி., நகர் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, சாலையோரம் இருந்த வாகை மரத்தின் தாழ்வான கிளையின் மீது கன்டெய்னர் பலத்த சத்தத்துடன் உரசியது. இதில் மரக்கிளை கிளை முறிந்து கன்டெய்னர் மீதும் சாலையிலும் விழுந்தது. பொது மக்கள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து சுதாரித்த லாரி டிரைவர் உடனடியாக வண்டியை நிறுத்தினார்.
தகவல் அறிந்து கோரிமேடு தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் லாரியின் மீதும், சாலையிலும் கிடந்த மரக்கிளையை வெட்டி அப்புறப்படுத்தினர். பின் ஒரு பக்கமாக வாகனங்கள் அனுப்பப்பட்டன. அரை மணி நேரத்திற்கு பிறகு கன்டெய்னர். மீது விழுந்த மரக்கிளை வெட்டி அகற்றப்பட்டது.
கன்டெய்னர் லாரி உயரமாக இருந்தால் இ.சி.ஆர்., கொக்கு பார்க் வரை மரக்கிளைகளால் எந்த இடையூறு ஏற்படாமல் பாதுகாப்பாக அழைத்து சென்று அனுப்பினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதித்தது.