தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின்சாரம் தாக்கி காயமடைந்த கொத்தனார் சாவு உறவினர்கள் மறியலால் போக்குவரத்து பாதிப்பு

 மின்சாரம் தாக்கி காயமடைந்த கொத்தனார் சாவு உறவினர்கள் மறியலால் போக்குவரத்து பாதிப்பு

 மின்சாரம் தாக்கி காயமடைந்த கொத்தனார் சாவு உறவினர்கள் மறியலால் போக்குவரத்து பாதிப்பு


ADDED : மே 30, 2026 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 05:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார் அருகே வீடுகட்டும் பணியில் ஈடுபட்ட கொத்தனார் மின்சாரம் தாக்கி, சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவத்தை கண்டித்து பத்துக்கண்ணு சதுக்கத்தில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சீனுவாசன், 57; கொத்தனார். கடந்த 22ம் தேதி அதேப் பகுதியை சேர்ந்த சக்திவேல், 62, என்பவர் புதிதாக கட்டிவரும் வீட்டு வேலைக்காக சீனுவாசனை அழைத்து சென்றார். புதிய வீட்டின் எதிரே எச்.டி., மின்கம்பி சென்றுள்ளது.

சீனுவாசன் இரும்பு கம்பியை துாக்கியபோது, மின் கம்பியில் உரசியதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார்.

காயமடைந்த அவர், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சீனுவாசன் நேற்று காலை இறந்தார்.

விபத்து குறித்து வில்லியனுார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. சீனுவாசனின் உடலை புதுச்சேரிக்கு கொண்டு வருவதற்கு போலீசாரின் உதவியை நாடினர்.

போலீசார் வருவதாக கூறி அலைக்கழித்து வந்தனர்.

ஆத்திரமடைந்த சீனுவாசனின் உறவினர்கள் நேற்று பிற்பகல் 3:30 மணியளவில் பத்துக்கண்ணு சதுக்கம் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள், வழக்கில் மெத்தனம் காட்டிய சப்-இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

உயிரிழப்புக்கு காரணமான சக்திவேல் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என, வலியுறுத்தினர்.

அவர்களிடம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், பேச்சு வாரத்தை நடத்தி, சக்திவேல் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், இழப்பீடு கிடைக்க பரிந்துரை செய்வதாகவும் உறுதியளித்தார்.

அதனை ஏற்று மறியலை கைவிட்டனர். இதனால், பத்துக்கண்ணு சதுக்கத்தில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us