UPDATED : செப் 24, 2026 11:25 PM
ADDED : செப் 24, 2026 11:12 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்பட்டிந்த வாகனங்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வேலையன், பில்டர் எஸ்.ஐ., மற்றும் போலீசார் இந்திரா சதுக்கத்தில் இருந்து மூலக்குளம் வரை ஆய்வு மேற்கொண்டனர். போக்குவரத்திற்கு இடையூறாக விதிமீறி நடை பாதைகளிலும், சாலைகளிலும் வாகனங்களை நிறுத்தியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அதே போல, கடைகளுக்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்தித் தராத கடைகளின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். போக்குவரத்திற்கு இடையூறாக நின்ற வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
