/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தென் மாவட்டங்களுக்கு படையெடுத்த வாகனங்களால் விழுப்புரத்தில் நெரிசல்
/
தென் மாவட்டங்களுக்கு படையெடுத்த வாகனங்களால் விழுப்புரத்தில் நெரிசல்
தென் மாவட்டங்களுக்கு படையெடுத்த வாகனங்களால் விழுப்புரத்தில் நெரிசல்
தென் மாவட்டங்களுக்கு படையெடுத்த வாகனங்களால் விழுப்புரத்தில் நெரிசல்
ADDED : ஜன 12, 2025 05:12 AM

விழுப்புரம் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, தென் மாவட்டங்களுக்கு படையெடுத்த வாகனங்களால் விழுப்புரம் பைபாஸ் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதையொட்டி, சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதி களில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நாளை (13ம் தேதி) திங்கட்கிழமை ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு, பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லத் துவங்கினர்.
அதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்ற அதிகளவிலான வாகனங்களால், விழுப்புரம் பைபாஸ் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் பல மணி நேரமாக காத்திருந்து மெதுவாக ஊர்ந்து சென்றன.
விக்கிரவாண்டி மற்றும் உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதிகளில் கடுமையான வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் 8 லேன்கள் திறக்கப்பட்டு நெரிசல் இன்றி வாகனங்கள் எளிதாக கடந்து சென்றன.
நேற்று இரவு 7.00 மணி வரை சென்னை மார்க்கமாக 15ஆயிரம் வாகனங்களும், தென்மாவட்டங்களை நோக்கி 38 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றன.
தினசரி டோல்பிளாசாவை சராசரியாக 24 ஆயிரம் வாகனங்கள் கடந்த நிலையில் நேற்று இரவு 7.00 மணி வரை 29 ஆயிரம் வாகனங்கள் கூடுதலாக சென்றன. விழுப்புரம் எஸ்.பி., சரவணன் உத்தரவின் பேரில் விக்கிரவாண்டி டி.எஸ்.பி., நந்தகுமார் மற்றும் போக்கு வரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.