தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்

போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்

போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்


ADDED : ஆக 20, 2026 04:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 04:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 : அரியாங்குப்பம்: போக்குவரத்து போலீசார் (தெற்கு) பஸ் டிரைவர்கள் மற்றும் பயணிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

புதுச்சேரி போக்குவரத்து தெற்கு பகுதி போலீசார் மற்றும் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், போக்குவரத்து விதிகள் குறித்து போக்குவரத்து எஸ்.பி, பக்தவச்சலம் தலைமையில் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பஸ் டிரைவர்கள், கன்டக்டர்கள் மற்றும் பஸ்சில் பயணம் செய்த பயணிகளுக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தன்வந்தரி துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  

அதில், வாகனங்களை அதிவேகமாக ஓட்டக்கூடாது, வாகனம் ஓட்டும் போது, மொபைல் பேசக்கூடாது, மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். பள்ளி மற்றும் மருத்துவமனை பகுதியில் ஏர் ஹாரன் அடிப்பதை தவிர்க்க வேண்டும். பஸ் நிறுத்தம் பகுதியில் மட்டுமே பஸ்சை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

நிகழ்ச்சியில், பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.  

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us