தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொடரும் வாகன நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

 தொடரும் வாகன நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

 தொடரும் வாகன நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை


ADDED : ஆக 27, 2026 02:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 02:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருபுவனை: மதகடிப்பட்டு மேம்பாலம் நான்குமுனை சந்திப்பில் தொடரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதுச்சேரி வில்லியனுார் மேற்குப் பகுதி போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், புதுச்சேரியின் எல்லைப் பகுதியான மதகடிப்பட்டு பகுதியில் மருத்துவக் கல்லுாரி, பொறியியல் கல்லுாரி, அரசு கல்லுாரி உள்பட பல்வேறு கல்லுாரிகள் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் தினசரி காலை, மாலை பள்ளி, கல்லுாரி வேலை நேரங்களில் வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வரும் கண்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களால் மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பு பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள், மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் அவதியுறும் நிலை இருந்து வருகிறது.

நான்குமுனை சந்திப்பில் சிக்னல் விளக்குகள் செயல்பாட்டில் இருந்தும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை. இது பல ஆண்டுகளாக தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் வில்லியனுார் மேற்குப் பகுதி போக்குவரத்து போலீசார் மதகடிப்பட்டு மேம்பாலம் நான்கு முனை சந்திப்பில் காலை 7:00 முதல் 10:00 மணி வரையும், மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரையும் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதித்துள்ளனர்.

இதற்கான அறிவிப்பு பலகை நேற்று முன்தினம் மேம்பாலம் நான்கு முனை சந்திப்பில் வைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us