/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆற்றில் மூழ்கி மாணவர் பலி வில்லியனுார் அருகே சோகம்
/
ஆற்றில் மூழ்கி மாணவர் பலி வில்லியனுார் அருகே சோகம்
ஆற்றில் மூழ்கி மாணவர் பலி வில்லியனுார் அருகே சோகம்
ஆற்றில் மூழ்கி மாணவர் பலி வில்லியனுார் அருகே சோகம்
ADDED : டிச 09, 2024 04:49 AM

வில்லியனுார் : வில்லியனுார் அருகே ஆற்றில் மூழ்கி அரசு பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
வில்லியனுார் அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமம், முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராசு மகன் விஷ்வா, 14; மங்கலம் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று மதியம் வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் மங்கலம் பகுதியை சேர்ந்த உடன்படிக்கும் இரு நண்பர்கள் விஷ்வா வீட்டிற்கு வந்தனர்.
மூவரும் கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் செல்லும் குடுவையாறு அணைக்கட்டு பகுதிக்கு சென்று குளித்தனர். அப்போது ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் வந்ததால் நீச்சல் தெரியாத விஷ்வா நீரில் அடித்து செல்லப்பட்டார். உடன் குளித்த மாணவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் கிராம இளைஞர்கள் குடுவையாற்றில் இறங்கி விஷ்வாவை தேடினர்.
ஒரு மணி நேர தேடலுக்கு பிறகு விஷ்வாவை மீட்டனர். அவரை கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து விஷ்வா இறந்து விட்டதாக தெரிவித்தார்.
புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.