ADDED : ஏப் 05, 2026 03:44 PM
பாகூர்: ஓட்டுப்பதிவு நிகழ்வுகளை கண்காணிக்க, தற்செயல் கலப்பு முறையில் நியமனம் செய்யப்பட்ட நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
புதுச்சேரி மண்டலத்தில் 167 ஓட்டுச் சாவடிகள் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஓட்டுச்சாவடிகளில் 131 இடங்களில், ஓட்டுப் பதிவு நாளன்று நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்தலை உறுதிப்படுத்தும் பொருட்டு ஓட்டுப் பதிவு நிகழ்வுகளை கண்காணிக்க, மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் நுண் பார்வையாளர்களாக, 155 அலுவலர்கள் தற்செயல் கலப்பு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான பயிற்சி முகாம் கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கலந்தாய்வு கூடத்தில் நடந்தது.
இப்பயிற்சியில், நுண் பார்வையாளர்களின் கடமைகள் மற்றும் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், புதுச்சேரி மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள அனைத்து தேர்தல் பொது பார்வையாளர்களும் பங்கேற்றனர்.
முன்னதாக, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், பாகூர், ஊசுடு மற்றும் நெட்டப்பாக்கம் தொகுதியில் பதற்றமான ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்டனர்.
