தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உளவுத்துறையில் நவீன தொழில்நுட்பம் போலீசாருக்கான பயிற்சி முகாம் துவக்கம்

 உளவுத்துறையில் நவீன தொழில்நுட்பம் போலீசாருக்கான பயிற்சி முகாம் துவக்கம்

 உளவுத்துறையில் நவீன தொழில்நுட்பம் போலீசாருக்கான பயிற்சி முகாம் துவக்கம்


ADDED : ஜூலை 28, 2026 03:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2026 03:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி காவல்துறை சார் பில் உளவு பிரிவு போலீசாருக்கான மூன்று நாள் 'நுண்ணறிவு தொழிற்நுட்பப் பயிற்சி' முகாம் நேற்று துவங்கியது.

கோரிமேடு போலீஸ் சமுதாயக் கூடத்தில் நடந்த பயிற்சி முகாமை சீனியர் எஸ்.பி., (பயிற்சி மற்றும் நலன்) ராஜீந்தர் குமார் குப்தா தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

முகாமில், சட்டம் -ஒழுங்கைப் பராமரிக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்க முன் கூட்டியே தகவல்களைச் சேகரிக்கும் திறனை மேம்படுத்துதல், ரகசியத் தகவல்களைத் துல்லியமாகச் சேகரித்தல், நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி குற்றங்களைக் கண்காணித்தல், சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தைக் கண்டறிதல், தகவல் பகுப்பாய்வு, பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் நவீன உளவுத்துறை செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி முகாமில், உளவுத்துறை உதவி இயக்குநர் ராஜேஷ், சீனியர் எஸ்.பி. நித்யா ராதாகிருஷ்ணன், எஸ்.பி.,க்கள் ரங்கநாதன், நல்லாம் கிருஷ்ணாபாபு உள்ளிட்ட உளவுத்துறை பிரிவு மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us