/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நெல் சாகுபடியில் இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி முகாம்
/
நெல் சாகுபடியில் இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி முகாம்
நெல் சாகுபடியில் இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி முகாம்
நெல் சாகுபடியில் இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி முகாம்
ADDED : மார் 06, 2024 03:04 AM

நெட்டப்பாக்கம் : கரிக்கலாம்பாக்கம் வேளாண் அலுவலகம் சார்பில், நெல் சாகுபடியில் இடுபொருட்கள் தயாரிக்கும் பயிற்சி முகாம் வேளாண் அலுவலகத்தில் நடந்தது.
வேளாண் அலுவலர் தினகரன் தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவர் செல்வமுத்துவரவேற்றார்.
எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலைய வல்லுநர் திருவரசன், நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள், அதிக மகசூல் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி பேராசிரியர் ராஜ்குமார் மண் வளத்தை பாதுகாப்பது, அதிக மகசூல் பெறுவது குறித்ததொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார்.
அய்யப்பன் இயற்கை விவசாயம்குறித்து கருத்துரை வழங்கினார்.வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் அமிர்த கரைசல், பஞ்சகாவியம், முட்டை கரைசல், மீன் அமிலம் தயாரித்தல் அங்கக இடுப்பொருட்கள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
முகாமில் நுாற்றுாக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, பயனடைந்தனர். ஏற்படுகளை துணை வேளாண் அலுவலர் கிருஷ்ணன்,செயல் விளக்கு உதவியாளர் குமணன்,தம்புசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

