தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நவீன முறையில் மணிலா சாகுபடி: விவசாயிகளுக்கு பயிற்சி

 நவீன முறையில் மணிலா சாகுபடி: விவசாயிகளுக்கு பயிற்சி

 நவீன முறையில் மணிலா சாகுபடி: விவசாயிகளுக்கு பயிற்சி


ADDED : ஜன 15, 2026 07:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2026 07:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுாரில் நவீன முறையில் மணிலா சாகுபடி செய்து, அதிக லாபம் ஈட்டுவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் தேசிய எண்ணை வித்து இயக்கம் ஆகியன சார்பில், திருக்காமீஸ்வரர் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில் பயிற்சி முகாம் நடந்தது. வில்லியனுார் கோட்ட துணை வேளாண் இயக்குனர் ராஜ்குமார் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். தொண்டமாநத்தம் உழவர் உதவியக வேளாண் அலுவலர் சங்கரதாஸ் வரவேற்றார்.

அரியூர் உழவர் உதவியாக வேளாண் அலுவலர் சத்தியன் நோக்க உரையாற்றினார். காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் ரவி, மணிலா சாகுபடியில், நவீன தொழில் நுட்பங்களை கொண்டு அதிக லாபம் ஈட்டுவது குறித்து விளக்கினார். காமராஜர் அறிவியல் நிலைய மணிமேகலை பூச்சி மற்றும் நோய் கட்டுப்படுத்துவது குறித்து கூறினார்.

நிகழ்ச்சியில் அரியூர் மற்றும் தொண்டமாநத்தம் உழவர் உதவியாகத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். முகாமில் மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி இறுதியாண்டு மாணவிகள் கலந்து கொண்டனர் .

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us