தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காளான் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

 காளான் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

 காளான் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி


ADDED : ஏப் 12, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2026 07:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சுத்துக்கேணியில் வேளாண் கல்லுாரி மாணவிகள் காளான் வளர்ப்பு குறித்து விசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின் கீழ் செயல்படும் வேளாண் அறிவியல் கல்லுாரியில் பயிலும் இளநிலை இறுதி ஆண்டு மாணவிகள் காட்டேரிக்குப்பத்தில் ஊரக வேளாண் பயிற்சி முகாமில் ஈடுபட்டுள்ளனர்.

பயிற்சி முகாம் வேளாண் கல்லுாரி முதல்வர் மொகமத்யாசின், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ்கெலுஸ்கர், திட்ட பொறுப்பாளர் ராஜேந்திர பிரசாத் ஆகியோரின் தலைமையில் நடந்து வருகிறது.

முகாமில் பங்கேற்றுள்ள மாணவிகள் பவித்திரா பூழியில், பிரித்தி சுப்ரஜா, ந.பிரியதர்ஷினி, பி.பிரியதர்ஷினி, தி.பிரியதர்ஷினி , பிரியங்கா, ராகவி, ராமலட்சுமி, சபிதா, சஹானா ஆகியோர் சுத்துக்கேணி விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு காளான் வகைகளை எடுத்துரைத்து, சிப்பி காளான் வளர்ப்பு முறை, அதற்கு ஏற்ற சூழ்நிலை மற்றும் காளான் வளர்ப்பால் ஏற்படும் கூடுதல் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

திரளான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us