/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கறவை மாடுகள் வளர்ப்பு விவசாயிகளுக்கு பயிற்சி
/
கறவை மாடுகள் வளர்ப்பு விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : டிச 23, 2024 06:22 AM

வில்லியனுார்: வில்லியனுார் உழவர் உதவியகம் மற்றும் காரைக்கால் பண்டித ஜவகர்லால் நேரு வேளாண் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண்மை பணி அனுபவ பயிற்சியை உறுவையாறில் நடத்தினர்.
பயிற்சியில், பசு மாடு வளர்க்கும் பெண் விவசாயிகளுக்கு பால் கறக்கும் இயந்திரம், கறவை மாட்டின் பராமரிப்பு மற்றும் மாட்டு நோய்களை தவிர்க்கும் முறைகளை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
மாடுகளை பாதிக்கும் நோய்கள் மற்றும் அதை தடுக்க வழிகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில், மாணவிகள் அபி பிரசன்னா, அர்ச்சனா, பிரியதர்ஷினி, கனிஷ்கா, கிளாரா கரோலின், நேகா, சினேக தர்சினி, இளவேனில், ஆனிதாமஸ் கலந்து கொண்டனர்.