/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாக்காளர் பட்டியல் திருத்த பணி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
/
வாக்காளர் பட்டியல் திருத்த பணி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
வாக்காளர் பட்டியல் திருத்த பணி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
வாக்காளர் பட்டியல் திருத்த பணி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
ADDED : அக் 31, 2025 02:14 AM

புதுச்சேரி:  புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் பங்கேற்கவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு கலெக்டர் தலைமையில் நடந்தது.
தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, புதுச்சேரியில் வரும் 4ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெறவுள்ளது.
அதனையொட்டி, இப்பணியில் ஈடுபடவுள்ள வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவாளர்கள், துணை தாசில்தார்கள் மற்றும் பிற தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு துணை தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆதர்ஷ் மற்றும் தில்லைவேல் ஆகியோர் பயிற்சி மற்றும் ஆலோசனை  வழங்கினர்.