UPDATED : அக் 07, 2026 01:53 AM
ADDED : அக் 07, 2026 01:48 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி மாணவிகள் கிராமப்புற வேளாண் பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக சோரப்பட்டு விவசாயிகளுக்கு ஜீரோ எனர்ஜி கூலிங் சேம்பர் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
நிகழ்ச்சியில், கல்லுாரி மாணவிகள் அபரீணா, அபிநயஸ்ரீ, அகல்யா, அஞ்சனா, அருள்மொழி, பவன்யா, சித்ரா, தனுஷ்யாஸ்ரீ, தீபிகா ஆகியோர் விவசாயிகளுக்கு காய்கறிகள், பழங்கள் அறுவடையின் போது மின்சாரம் இல்லாமல் குறைந்த செலவில் இயற்கையான முறையில் அறுவடை செய்யும் வழிமுறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
சோரப்பட்டு மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, பயனடைந்தனர்.
