/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செவிலியர்களுக்கு பயிற்சி; கவர்னர் தமிழிசை அறிவுறுத்தல்
/
செவிலியர்களுக்கு பயிற்சி; கவர்னர் தமிழிசை அறிவுறுத்தல்
செவிலியர்களுக்கு பயிற்சி; கவர்னர் தமிழிசை அறிவுறுத்தல்
செவிலியர்களுக்கு பயிற்சி; கவர்னர் தமிழிசை அறிவுறுத்தல்
ADDED : மார் 04, 2024 06:04 AM
புதுச்சேரி : புதிதாக பணியமர்த்தப்படும் செவிலியர் அதிகாரி களுக்கு நோக்குநிலை பயிற்சி அளிக்க கவர்னர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து கவர்னர் மாளிகை செயலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
புதுச்சேரி அரசு, சுகாதாரத் துறையில் செவிலியர் அதிகாரிகள் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு வழங்கப்பட்ட ஒப்புதலின் அடிப்படையில் அதற்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் தற்போது முடிவடைந்தது.
சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டுள்ள மொத்தம் 144 பேரில் முழுமையாக சான்றிதழ்களை சமர்ப்பித்த 92 பேருக்கு உடனடியாக பணி ஆணைகள் வழங்கவும், புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டிய 52 பேருக்கு சான்றிதழ்கள் பெறப்பட்ட பின் பணியாணை வழங்கவும் கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்க வேண்டியவர்களுக்கு வரும் 8 வரை கால அவகாசம் வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், புதிதாக பணியமர்த்தப்படும் செவிலியார் அதிகாரிகளுக்கு மார்ச் 7 ம் தேதி நோக்குநிலை பயிற்சி அளிக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.

