/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழில்முறை நடிகர்களுக்கு பயிற்சி; புதுச்சேரியில் 26ம் தேதி துவங்குகிறது

ADDED : ஜன 24, 2026 06:44 AM
புதுச்சேரி: தொழில்முறை நடிகர்களுக்கான பயிற்சி பட்டறை 26ம் தேதி துவங்குகிறது.
புதுச்சேரி மானவ் கலை ஆய்வு நிறுவனம், ஜோதி சிலம்பம் குருகுலம் சார்பில், தொழில்முறை நடிகர்கள், கலைஞர்களுக்காக மைக்கேல் செக்கோவ் நுட்ப பயிற்சி பட்டறை வரும் 26 முதல் 30ம் தேதி வரை பூரணாங்குப்பம் ஜோதி சிலம்ப குருகுலத்தில் நடக்கிறது.
துவக்க நிகழ்ச்சியில் சினிமா இயக்குநர்கள் நலன்குமாரசாமி, ஸ்ரீநிவாஸ் கவிநயம், இசையமைப்பாளர் போஸ், மானவ் அறக்கட்டளை நிறுவனர் உதய சூரியன், ஜோதி சிலம்ப குருகுல நிர்வாகி ஜோதி செந்தில் கண்ணன் பங்கேற்கின்றனர். சிவம் பரேக் செக்கோவ் பயிற்சியளிக்கிறார்.
மானவ் அறக்கட்டளை நிறுவனர் உதய சூரியன் கூறுகையில், 'மைக்கேல் செக்கோவ் நடிப்பு பயிற்சி என்பது கற்பனைத் திறன், உளவியல் சைகைகள், உடல் இயக்கங்கள் மூலம் கதாபாத்திரத்தை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் நுட்பம். பயிற்சி காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை நடக்கிறது.
நாடகக் கலைஞர்கள்,நடிகர்கள், இயக்குநர்கள், மாணவர்கள் பங்கேற்கலாம். முன் பதிவிற்கு 9791563645, 8072092226 என்றஎண்களில் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.