/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பனை ஓலை பொருட்கள் தயாரிக்க பயிற்சி
/
பனை ஓலை பொருட்கள் தயாரிக்க பயிற்சி
ADDED : பிப் 14, 2023 05:52 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த கைவினை பொருட்களுக்கான பஜாரில் பனை ஓலை மூலம் தயார் செய்யும் பொருட்களுக்கான பயிற்சி பட்டறை நடந்தது.
கிராப்ட்ஸ் கவுன்சில் ஆப் புதுச்சேரி சார்பில், கடற்கரை சாலையருகே புதுவானம் கிராப்ட்ஸ் (கைவினை பொருட்கள்) பஜார் கடந்த 10ம் தேதி துவங்கியது.
இங்கு, பல மாநிலம், மாவட்டங்களில் இருந்து கைவினை கலைஞர்கள் தயாரித்த பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தனர். 3 நாட்கள் நடந்த கைவினை பொருட்களுக்கான பஜார் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.
இதையொட்டி, நேற்று முன்தினம் பனைஓலை கைவினை பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடந்து.
சீர்காழி, திரவு அமைப்பை சேர்ந்த கைவினை பெண் கலைஞர் பனை ஓலையில் பொருட்களை தயாரிக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளித்தார்.
இவர், பனை ஓலையில் கிளி பொம்மை, பாக்ஸ், பேக், கம்மல், ஜிமிக்கி உட்பட பல்வேறு பொருட்களை 10 நிமிடங்களுக்குள் செய்து அசத்தினார்.
இதில், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பலர், பயிற்சி பெற்றனர்.
பனைஓலை மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டும் பார்க்காமல், அதை தயாரிக்கும் கைவினை கலைஞர்களின் உழைப்பையும் கண்டு அந்த பொருட்களையும் மதிப்பு கொடுத்து, மக்கள் வாங்கி செல்ல வேண்டும் என, கிராப்டஸ் பஜாரை ஏற்பாடு செய்த கிராப்ட்ஸ் கவுன்சில் ஆப் புதுச்சேரி நிறுவனர் சித்தாரா நாயர் ஜெர்டீஸ் கூறினார்.