/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புகையிலையை கட்டுபடுத்துவது குறித்து பயிற்சி கூட்டம்
/
புகையிலையை கட்டுபடுத்துவது குறித்து பயிற்சி கூட்டம்
புகையிலையை கட்டுபடுத்துவது குறித்து பயிற்சி கூட்டம்
புகையிலையை கட்டுபடுத்துவது குறித்து பயிற்சி கூட்டம்
ADDED : ஜன 25, 2024 04:33 AM

புதுச்சேரி, : மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையம், இந்திராகாந்தி மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து புகையிலையை கட்டுப்படுத்துவது பற்றி மாநில அளவிலான பயிற்சி கூட்டத்தை நடத்தின.
இந்திராகாந்தி மருத்துவக் கல்லுாரியில் நடந்த கூட்டத்திற்கு சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தலைமை தாங்கினார். சமூக மருத்துவ துறை பேராசிரியர் கவிதா வரவேற்றார்.
தேசிய சுகாதார திட்டத்தின் நோடல் அதிகாரி கவிப்பிரியா தொடக்கவுரையாற்றினார்.
ஜிப்மர் நோய் தடுப்பு மற்றும் சமூக மருத்துவ துறை பேராசிரியர் கவுதம், மாநில புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், அவற்றை கட்டுப்படுத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
சூரியகுமார் நன்றி கூறினார்.