/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாகூர் கல்லுாரியில் பயிற்சி பட்டறை
/
தாகூர் கல்லுாரியில் பயிற்சி பட்டறை
ADDED : அக் 16, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லுாரி உளவியல் துறை மற்றும் புதுச்சேரி உளவியல் சங்கம் இணைந்து சர்வதேச மனநலம் தினத்தையொட்டி, ஒரு நாள் செய்முறை கருத்துருவாக்க பயிற்சி பட்டறை நடத்தின.
கல்லுாரி முதல்வர் சசிகாந்த தாஸ் தலைமை தாங்கினார். உளவியல் துறை சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் ராஜா, வனிதா, ராசையா ஆகியோர் மாணவர்களுக்கு மனநல திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தனர். துறைத் தலைவர் ராமபிரபு மனநலத்தினை பேணிக்காப்பதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். துணை பேராசிரியை ரோசலின் பிரபா நன்றி கூறினார்.