/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இல்ல சமையலருக்கு பயிற்சி பட்டறை
/
இல்ல சமையலருக்கு பயிற்சி பட்டறை
ADDED : செப் 30, 2024 05:50 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த இல்ல சமையல்காரர்களுக்கான பயிற்சி பட்டறையில், ஏராளமானோர் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து, பழைய துறைமுக வளாகத்தில், இல்ல சமையல்காரர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கை நடத்தியது.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். சுற்றுலாத்துறை செயலர் ஜெயந்த் குமார் ரே வாழ்த்தி பேசினார்.
புதுச்சேரி அரசு சமையல் மேலாண்மை கல்லூரியின் முதல்வர் நம்பி, பங்கேற்பாளர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.
இதில் நிபுணர்கள் யோகிதா உச்சில், ரெஸ்டோப்ரெனியர், பிராண்ட் கியூரேட்டர் மற்றும் ஆய்வாளர்கள் தேஜஸ்வி, சுரேஷ், பாலா ஆகியோர் சமையல் துறையின் வணிகப் பக்கத்தைப் பற்றிய நுண்ணறிவு தகவல்களை வழங்கினார்.
கல்வியாளர் ஜெய்ஸ்ரீ தொழில்துறை போக்குகள் குறித்த முன்னோக்கு திட்டங்களை விளக்கினார். உணவு கலைஞர்கங்கா போஹேகர், உணவு வழங்கல் மற்றும் உருவாக்கத்தின் கலை பற்றி விவாதித்தார். சித்த மருத்துவ நிபுணர் லாவண்யா, பிராந்திய சமையல் குறிப்புகளின் ஆரோக்கிய நன்மைகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கினார்.
நடைமுறை சமையல் குறிப்புகள் மற்றும் நுட்பங்களைப் பகிர்ந்து கொண்ட முன்னணி உணவகங்களைச் சார்ந்த சமையல்காரர்களுடன், பங்கேற்பாளர்கள் நேரடியாக ஈடுபட அனுமதிக்கும் ஒரு உற்சாகமான கேள்வி-பதில் அமர்வு தொடர்ந்தது.
இதில், சமையல் கலைஞர்கள் பல்விந்தர் சிங், விவேக், நாகராஜ், சதீஷ் ராஜசேகரன், கதிர் உள்ளிட்டோர், சமையல் கலை குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பட்டறை நிறைவு பெற்றது.