/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது இடங்களில் ரகளை; 8 பேர் கைது
/
பொது இடங்களில் ரகளை; 8 பேர் கைது
ADDED : அக் 18, 2024 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் பொது இடங்களில் ரகளையில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலை தனியார் மதுபார் அருகே நேற்று முன்தினம் இரவு ஒருவர் பொதுமக்களிடம் தகராறு செய்வதாக, லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
அதை யடுத்து, சப் இன்ஸ்பெக்டர் அன்சர்பாஷா மற்றும் போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர், லாஸ்பேட்டையை சேர்ந்த மணிகண்டன், 33; என, தெரிய வந்தது. அவரை கைது செய்தனர்.
மேலும், பொது இடங்களில் ரகளையில் ஈடுபட்ட லாஸ்பேட்டை குப்புசாமி, 32, விஜயசேகர், 28; குமார், 29; வீரமணி, 39; ஹரிகரன்,33; ராஜேஷ், 28; தீபன் சக்கரவர்த்தி, 36; ஆகிய ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.