தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,கள் இடமாற்றம்

 இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,கள் இடமாற்றம்

 இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,கள் இடமாற்றம்


ADDED : பிப் 21, 2026 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 05:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி காவல் துறையில் 17 இன்ஸ்பெக்டர்கள், 29 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆயுதப்படைக்கும், இன்ஸ்பெக்டர் தனசெல்வம் ஐ.ஜி., செயலாளர் பொறுப்பில் இருந்து முத்தியால்பேட்டைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சபாநாயகர் பாதுகாப்பு அதிகாரி பிரபாகரன் கலால்துறைக்கும், பாலமுருகன் கோரிமேட்டில் இருந்து சபாநாயகர் பாதுகாப்பு அதிகாரியாகவும், நாகராஜன் கிழக்கு போக்குவரத்தில் இருந்து கோரிமேட்டிற்கும், ஏழுமலை சி.பி.சி.ஐ.டி.,யில் இருந்து வன்கொடுமை தடுப்பு பிரிவுக்கும், கண்ணன் முதலியார்பேட்டையில் இருந்து சி.பி.சி.ஐ.டி.,க்கும், ஆறுமுகம் அரியாங்குப்பத்தில் இருந்து முதலியார்பேட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சப்-இன்ஸ்பெக்டர், கிட்லா சத்திய நாராயணா ஆயுதப்படையில் இருந்து அரியாங்குப்பத்திற்கும், வெங்கடாஜலபதி லஞ்ச ஒழிப்பு பிரிவில் இருந்து கிழக்கு போக்குவரத்துக்கும், புருஷோத்தமன் காரைக்கால் டவுனில் இருந்து லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கும், அறிவுசெல்வம் கலால்துறையில் இருந்து காரைக்கால் டவுனுக்கும், மர்தினி கோட்டுச்சேரியில் இருந்து ஆயுதப்படைக்கும், ராமு லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்து கோட்டுச் சேரிக்கும், லெனின்பாரதி திருநள்ளாறில் இருந்து திருப்பட்டினத்திற்கும், பிரவீன்குமார் காரைக்கால் உளவுப்பிரிவில் இருந்து திருநள்ளாறுக்கும், மரி கிறிஸ்டின் பால் திருபட்டினத்தில் இருந்து காரைக்கால் கடலோர காவல்படைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை புதுச்சேரி காவல்துறை தலைமையக எஸ்.பி., மோகன்குமார் பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us