/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிரான்ஸ்பார்மர் சபாநாயகர் இயக்கி வைப்பு
/
டிரான்ஸ்பார்மர் சபாநாயகர் இயக்கி வைப்பு
ADDED : பிப் 21, 2024 06:56 AM

அரியாங்குப்பம் : மணவெளி தொகுதியில் 18 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய டிரான்ஸ்பார்மரை சபாநாயகர் செல்வம் இயக்கி வைத்தார்.
அரியாங்குப்பம் டோல்கேட் அருகில் உள்ள அரவிந்தன் நகர் பகுதியில் குறைந்த மின் அழுத்தம் நிலவி வந்ததது.
இது குறித்து அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை வைத்தனர்.
அதையடுத்து மின்துறை சார்பில், 18 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, புதிதாக 315 கிலோ வாட் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.
இதன் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினர் சபாநாயகர் செல்வம் இயக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மின்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன், இளநிலை பொறியாளர் லுார்து ராஜ், பா.ஜ., தொகுதி தலைவர் ரஞ்சித்குமார், லட்சுமிகாந்தன், பொதுச் செயலாளர் செழியன் காமராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

