தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கல்லுாரி மாணவரை கத்தியால் குத்தி குருமாத்தை பறித்த திருநங்கை கைது

கல்லுாரி மாணவரை கத்தியால் குத்தி குருமாத்தை பறித்த திருநங்கை கைது

கல்லுாரி மாணவரை கத்தியால் குத்தி குருமாத்தை பறித்த திருநங்கை கைது


ADDED : ஆக 11, 2026 08:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2026 08:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதலியார்பேட்டை அருகே வாகனத்தில் லிப்ட் கேட்டு கல்லுாரி மாணவரை கத்தியால் குத்திய வெள்ளி குமாத்தை பறித்துச் சென்ற திருநங்கையை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, அபிேஷகப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் மகன் ரூபன்,19; இவர் பொறியியல் கல்லுாரியில் பி.டெக்., 3ம் ஆண்டு பயில்கிறார். அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாட்டிக்கு உணவு வழங்க ரூபன் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு பைகில் சென்றார்.

புதுச்சேரி – கடலுார் சாலையில் உள்ள பூரணாங்குப்பம் வந்த போது, அங்கு சாலையோரம் நின்றிருந்த திருநங்கை வசந்தி,40; என்பவர், வேல்ராம்பட்டில் இறக்கி விட கூறி லிப்ட் கேட்டு, வாகனத்தில் ஏறி அமர்ந்துள்ளார். முதலியார்பேட்டை மரப்பாலம் அருகே வேல்ராம்பட்டு செல்லும் சாலை செல்லும் வழியில் உள்ள இருட்டான பகுதிக்கு அழைத்து சென்ற திருநங்கை, திடீரென பைக் சாவியை எடுத்து கொண்டு அவர் வீட்டிற்குள்ளே ரூபனை அழைத்து சென்று பூட்டியுள்ளார்.

பைக் சாவியை ரூபன் கேட்ட போது, கத்தியை அவர் கழுத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்து, ரூபனை இடது முழங்கை, வலது கைவிரலில் குத்தியுள்ளார்.  ரூபன் 87 கிராம் வெள்ளி குருமாத்தை கழற்றி தந்த பின், பைக் சாவியை தந்துள்ளார். இதில் படுகாயமடைந்த ரூபன் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து திருநங்கை வசந்தியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us