/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போக்குவரத்து துறை அமலாக்க உதவியாளர்கள் களம் இறக்கம்
/
போக்குவரத்து துறை அமலாக்க உதவியாளர்கள் களம் இறக்கம்
போக்குவரத்து துறை அமலாக்க உதவியாளர்கள் களம் இறக்கம்
போக்குவரத்து துறை அமலாக்க உதவியாளர்கள் களம் இறக்கம்
ADDED : பிப் 06, 2025 07:04 AM

புதுச்சேரி; பயிற்சி முடித்த போக்குவரத்து துறையின் அமலாக்க உதவியாளர்கள், வாகனங்களை தணிக்கை செய்ய களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி போக்குவரத்து துறையில், அமலாக்க உதவியாளர் பணிக்கு 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, கடந்த 6 மாதம் பயிற்சி வழங்கப்பட்டது. இதனையடுத்து, பயிற்சி முடித்தவுடன், தற்போது போக்குவரத்து விதிமுறை மீறலுக்கு, அபராதம் விதிக்க களம் இறக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், புதுச்சேரி கோரிமேடு உள்பட பல்வேறு பகுதிகளில், வாகனங்களை தணிக்கை செய்து, ஆவணங்களை சரி பார்த்தனர். விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டுநர்களுக்கு, அவர்கள் அபராதம் விதித்தனர். போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் கூறுகையில், 'போக்குவரத்து காவலருக்கு உள்ள அதிகாரம், போக்குவரத்து அமலாக்க உதவியாளர்களுக்கும் உண்டு. இவர்கள், புதுச்சேரி மட்டுமின்றி, காரைக்கால், மாகி, ஏனாம் உள்ளிட்ட பிராந்தியங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு, பணியில் ஈடுபட்டுள்ளனர்' என்றார்.