தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ துணை ஜனாதிபதி வருகை போக்குவரத்து மாற்றம் 

துணை ஜனாதிபதி வருகை போக்குவரத்து மாற்றம் 

துணை ஜனாதிபதி வருகை போக்குவரத்து மாற்றம் 


ADDED : ஜூன் 16, 2025 12:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2025 12:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரிக்கு துணை ஜனாதிபதி வருகையையொட்டி, நகரப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய துணை ஜனாதிபதி 3 நாள் பயணமாக நேற்று மதியம் புதுச்சேரி வந்தார். இவர் கடற்கரை சாலையில் உள்ள நீதிபதி விருந்தினர் மாளிகையில் தங்கி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

அவரது வருகையையொட்டி, புதுச்சேரியில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள், சாலை தடுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, புதுச்சேரி நகரப்பகுதியானகடற்கரை சாலை, துமாஸ் வீதி, செயின்ட் லுாயிஸ் வீதி, செஞ்சி சாலையில் இருந்து கடற்கரை சாலை வரை, மணக்குள விநாயகர் கோவில் வீதி, ரங்கப்பிள்ளை வீதி முதல் டூப்பி வீதி வரை உள்ள சாலைகள், தேவைக்கேற்ப 3 நாட்களுக்கு வாகனம் இல்லாத மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், விதிமுறைகளை பின்பற்றவும், இந்த சாலைகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us