/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அப்போலோ கேன்சர் மையத்தில் நரம்பு துாண்டுதல் மூலம் சிகிச்சை
/
அப்போலோ கேன்சர் மையத்தில் நரம்பு துாண்டுதல் மூலம் சிகிச்சை
அப்போலோ கேன்சர் மையத்தில் நரம்பு துாண்டுதல் மூலம் சிகிச்சை
அப்போலோ கேன்சர் மையத்தில் நரம்பு துாண்டுதல் மூலம் சிகிச்சை
ADDED : நவ 22, 2024 05:30 AM

புதுச்சேரி: சென்னை அப்போலோ கேன்சர் மையத்தில், அறுவை சிகிச்சையின்றி, நரம்பு துாண்டுதல் மூலம், வலிக்கான சிகிச்சை செய்து, மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.
சென்னை அப்போலோ கேன்சர் மையத்திற்கு, ஓமன் நாட்டை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர், இடது கால் தொடைப் பகுதியில், அதிக வலி உள்ளதாகவும், பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என, வந்தார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், தொடர்ந்து, 3 மாதங்கள், மருந்துகள் கொடுத்தும், வலி சரியாகவில்லை. நரம்புகள் மூலம் அதிகமாக வலி இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
முதுகு தண்டு அறுவை சிகிச்சை நிபுணர், அப்பாஜி கிருஷ்ணன் தலைமையில், மருத்துவர்கள், ஆனந்த், பிரித்தா, சுனிதா ஆகியோர் கொண்ட குழுவினர்,அந்த நபருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல், நரம்புகளின் முடிச்சியின் ஒரு பகுதியில் இருந்து, ஊசி மூலம், முதுகு தண்டுவடத்தில், செலுத்தப்பட்டது. அப்போது, மூளையில்,வலி இல்லாமல், நரம்பு துாண்டுதலை கொண்டு, அவரது கால் தொடை வலிக்கான சிகிச்சை அளித்தனர். பின், அவர், முழு குணமடைந்தார்.
இந்த சிகிச்சை இந்தியாவில் முதன் முறையாக, அப்போலோ கேன்சர் மையத்தில், செய்து சாதனை செய்துள்ளோம், என சிகிச்சை அளித்தமருத்துவர் தெரிவித்தார்.