தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய பட்டு போன மரம் வெட்டி அகற்றம்

வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய பட்டு போன மரம் வெட்டி அகற்றம்

வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய பட்டு போன மரம் வெட்டி அகற்றம்


UPDATED : அக் 30, 2026 12:11 AM

ADDED : அக் 30, 2026 12:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 12:11 AM ADDED : அக் 30, 2026 12:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: காட்டுக்குப்பத்தில் வாகன ஓட்டிகளை, அச்சுறுத்தி வந்த பட்டு போன மரத்தை பொதுப்பணித் துறையினர் வெட்டி அப்புறப்படுத்தினர்.

புதுச்சேரி – கடலுார் சாலை காட்டுக்குப்பம் ஆர்.டி.ஒ., அலுவலகம் எதிரே சாலையோரமாக துாங்கு மூச்சு மரம் ஒன்று இருந்தது. இந்த மரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பட்டு போனது. அந்த மரம் காய்ந்து, மக்கி காற்று சற்று வேகமாக வீசும் போதெல்லாம், ஒவ்வொரு கிளைகளாக உடைந்து சாலையில் விழுந்து வந்தது.

தற்போது, பருவ மழை காலம் என்பதால், காற்று வேகமாக வீசினால், அந்த மரம் சாலையில் விழுந்து பெரும் அசம்பாவிதத்தை ஏற்படுத்தும் அபாயம் இருந்து வந்தது.

இதனால், மரத்தை வெட்டி அப்புறப்படுத்திட வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, புதுச்சேரி பொதுப்பணித்துறை சாலை பராமறிப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, மரத்தை வெட்டி அப்புறப்படுத்திட உத்தரவிட்டனர். இதையடுத்து, நேற்று பொதுப்பணித் துறை ஊழியர்கள், போக்குவரத்து போலீசாரின் உதவியுடன், போக்குவரத்தை மாற்று சாலையில் திருப்பி விட்டு, மரத்தை பாதுகாப்பாக வெட்டி அப்புறப்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us