தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காமராஜர் அரசு கல்லுாரியில் மரக்கன்றுகள் நடும் விழா

காமராஜர் அரசு கல்லுாரியில் மரக்கன்றுகள் நடும் விழா

காமராஜர் அரசு கல்லுாரியில் மரக்கன்றுகள் நடும் விழா


UPDATED : அக் 18, 2026 08:20 PM

ADDED : அக் 18, 2026 08:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 08:20 PM ADDED : அக் 18, 2026 08:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பம், காமராஜர் அரசு கல்லுாரியில் என்.சி.சி. தரைப்படை பிரிவு சார்பில் மாணவ, மாணவிகள் தாயின் பெயரில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் விழா திட்டத்தின் கீழ், நடந்த விழாவிற்கு கல்லுாரி முதல்வர் லெப்டினன்ட் கதிர்வேல் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.

இதில் ராணுவ அதிகாரி அசோக், தேசிய மாணவர் படை மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்துவதுடன், மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்துவதும், இயற்கையைப் பாதுகாப்பதில் இளைஞர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

நடுவதுடன் நின்றுவிடாமல், அவற்றை முறையாகப் பராமரித்து வளர்க்க வேண்டும் என்றும், பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்குவதில் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை வழங்க வலியுறுத்தப்பட்டது. என்.சி.சி., மூத்த மாணவர் சிவகுரு நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us