/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடல்
/
அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடல்
ADDED : டிச 17, 2024 05:29 AM

பாகூர்: குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
இளைஞர் மற்றும் பசுமை இயக்கம், சமுதாய நலப்பணித் திட்டமும் இணைந்து நடத்திய விழாவில், பட்டதாரி ஆசிரியர் கோமளா வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் கோமதி தலைமை தாங்கினார். நல்லாசிரியர் முனைவர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார்.
சமுதாய நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கரதேவி நோக்கவுரையாற்றினார். கணிப்பொறி பயிற்றுநர் பாலமுரளி வாழ்த்தி பேசினார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் ரேவதி பாராட்டி பேசினார்.
விழாவில், பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். பயிற்சி ஆசிரியை சுவாதி நன்றி கூறினார்.