/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா
/
அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா
ADDED : ஆக 16, 2025 03:03 AM

திருக்கனுார்: செட்டிப்பட்டு அரசு தொடக்கப் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 'தாயின் பெயரில் ஒரு மரம்' என்ற திட்டத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் தாஜ்தீன் அலி அகமது தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ரமேஷ் கலந்து கொண்டு மாணவர்களின் 'தாயின் பெயரில் ஒரு மரம்' என்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
இதில், ஊர் பிரமுகர்கள் குமார்ராஜா, முருகன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, முக்கிய வீதிகள் வழியாக சென்று மரக்கன்று நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கனகதுர்கா, மோகனா, ஊழியர் சுமதி உள்ளிட்ட பலர் செய்திருந்தனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

