/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காமராஜர் கல்லுாரியில் தாயின் பெயரில் மரக்கன்று நடும் விழா
/
காமராஜர் கல்லுாரியில் தாயின் பெயரில் மரக்கன்று நடும் விழா
காமராஜர் கல்லுாரியில் தாயின் பெயரில் மரக்கன்று நடும் விழா
காமராஜர் கல்லுாரியில் தாயின் பெயரில் மரக்கன்று நடும் விழா
ADDED : ஆக 12, 2025 01:42 AM
திருபுவனை: புதுச்சேரி மதகடிப்பட்டு அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கலைக்கல்லுாரியில் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் திட்டத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு கல்லுாரி முதல்வர் கனகவேல் தலைமை தாங்கினார்.துறை தலைவர்கள் சிவக்குமார், வைத்தியலிங்கம், செந்தமிழ்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுலாத்துறை பேராசிரியர் கதிர்வேல் வரவேற்றார்.
திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்துப் பேசினார்.தொடர்ந்து முதல்வர், கல்லுாரி மாணவ-மாணவிகள், துறை தலைவர்கள்,பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என 100 மரக்கன்றுகள் நட்டனர்.