ADDED : செப் 17, 2026 07:44 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ஏம்பலம் அரசு மேல்நிலைப் பள்ளி, காவேரி கூக்குரல் அமைப்பு சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
பள்ளியின் துணை முதல்வர் வில்சன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் வளர்மதி, பொறுப்பாசிரியர் தீபாய்ந்தன், ஈஷா அமைப்பின் அலுவலர் அசோக், ஆசிரியர் தேவேந்திரன் முன்னிலை வகித்தனர்.
விழாவையொட்டி, பள்ளி வளாகம் முழுதும் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், பள்ளியின் மேலாண்மை குழு தலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை சமுதாய நலப்பணித்திட்ட அலுவலர் ஜானகிராமன் செய்திருந்தார்.
