ADDED : ஆக 19, 2025 07:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுாரில் விளையாட்டு திடலில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பண்டசோழநல்லூர் கிராமத்தில் தொகுதி எம்.எல்.ஏ., நிதியில் இருந்து 2 ஏக்கர் நிலப்பரப்பில் விளையாட்டு திடல் மற்றும் மனமகிழ் மன்றம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. விளையாட்டு திடலில் மாணவர்களின் நலன் கருதி விளையாட்டு திடலை சுற்றி மரக்கன்றுகள் நடும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் ராமலிங்கேஸ்வர ராவ், பஞ்., வரிவசூல் அதிகாரி பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

